0:00
மகிமைமிகு மகா கணபதியே
மனமதி அருள்பவனே
மஞ்சளில் இருப்பவனே
மஹா தேவன் மகனே
வல்லமை தருவோனே
வரமருளும் அப்பனே
வான்புகழ் கொண்டவனே
வளமார வாழ்விப்பவனே
நிம்மதியைத் தருபவனே
நிரந்தரமாய் இருப்பவனே
நிச்சயமாய் அருள்பவனே
நின்னைச் சரணடைந்தேனே !!!
மகிமைமிகு மகா கணபதியே
-சரணம்-.