கந்த வடிவேலா முருகா கங்கை உமை பாலா
சந்தன பொட்டழகா முருகா தாமரை
வாயழகா
வெள்ளி வேலழகா முருகா விபூதி
பொட்டழகா
துள்ளி மயிலழகா முருகா வள்ளி உயர்தழகா
காவி உடையழகா முருகா கஸ்தூரி
பொட்டழகா
சேவர் கொடியழகா முருகா செந்தூர்
வாயழகா
வள்ளி தெய்வானையுடன் மயில்மேல்
நடனமாடி வரும்
கடவுள் உந்தனை போல் முருகா கண்கண்ட
தெய்வமுண்டோ
முருகா கண்கண்ட தெய்வமுண்டோ (2)
– சரணம் ஐயப்பா –