கணபதியே சாமி கணபதியே
கணபதியே சாமி கணபதியே
மூலமுதற் பொருளே கணபதியே
முக்கண்ணன் மகனே கணபதியே
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே
காத்தருள வேண்டுமய்யா கணபதியே.
(கணபதியே)
பார்வதியின் புத்திரன் கணபதியே
சண்முக சோதரன் கணபதியே
வினைதீர்த்த வித்தகன் கணபதியே
பண்புமனம் கொண்டவன் கணபதியே
பானை வயிற்றோன் கணபதியே
கும்பிட வந்தோம் கணபதியே,
(கணபதியே),
தும்பிமுகம் கொண்டவரே கணபதியே
துணையாக வரவேண்டும் கணபதியே
மூஷிக வாஹனன் கணபதியே
முன்னின்று காக்க வேண்டும் கணபதியே
பாசமுடன் ஓடிவந்தோம் கணபதியே
பாதுகாக்க வேண்டுமய்யா கணபதியே.
(கணபதியே)
-சரணம்–