உள்ளத்தின் நாயகனே விநாயகனே
ஊக்கத்தின் ஞாயிரே உச்சி பிள்ளையாரே
அலையா மனம் தருவாய் அரிச்சந்திர ஐங்கரனே
தயாள நிதியே தால மூல கணபதியே
முதலாய் வணங்கும் மூஞ்சூறு வாகனனே
எண்ணிக் கருணை பொழியும் கணநாதனே
பரமானந்தம் அருளும் பரம்பொருளே
பல்வளம் அருளும் பரிபூரணனே
மதன வடிவமே மஞ்சளில் இருப்பவனே
மறவாமல் காத்திடும் மகாகணபதியே
வரமருளும் அப்பனே வக்கிர துண்டனே
வினை தீர்ப்பவனே விக்கின ராஜனே
செளபாக்கியம் தந்தருளும் சங்கரன் மகனே.
உன் பொற்பாதமே உற்றதுணை – உலக நாயகனே சரணம் சரணம் சரணம்.
– சரணம் ஐயப்பா –