0:00
விக்ன விநாயகா வினை தீர்த்திடுவாய் நம்பிக்கை
கொண்டேன் தும்பிக்கையோனே!
மூலமுதல்வா முக்கண்ணன் புதல்வா
மூஷிக வாஹன மோஹன ப்ரியகரா
மூவுலகுக்கெல்லாம் முதல்
தெய்வம் நீயே!
முத்துக் குமரனின் மூத்த சகோதரனே
முத்து முத்தாக உன்னை பாடி
மகிழ்ந்திட மனதார வேண்டினேன்
முன்னின்று அருள்வாய்!
ப்ரணவ ஸ்வரூபா பார்வதி புத்ரா
பாபவிமோசன பரம க்ருபாகர
ஐந்து கரத்தோனே ஆதி கஜானனா
அற்புத சுந்தரா சக்தி கணேசா!
– சரணம் ஐயப்பா –
– சரணம் ஐயப்பா –