செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட நல்ல
தஞ்சமுடன் தங்க வெள்ளி குஞ்சரங்கள்
பாட
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
(பின்பாட்டு 4)
ஒண்ணாம் படி எடுத்து உசந்த பூவா
ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே (பின்பாட்டு 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டு 2)
தன்னன்ன…
ரெண்டாம் படி எடுத்து ரத்தினகிளிய
ஒரஓரமா பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
மூணாம் படி எடுத்து முத்துப்பல்லக்காம்
ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
நாலாம் படி எடுத்து நாகரத்தின ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டு 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டு 2)
அஞ்சாம் படி எடுத்து அஞ்சுவர்ணக்கிளி
ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
ஆறாம் படி எடுத்து அரும்பு மோதிர
ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
ஏழாம் படி எடுத்து எசந்த பூவ ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
எட்டாம் படி எடுத்து பட்டுசீலையாம்
ஒரஓரமா
பத்திர காளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாள
மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
(பின்பாட்டூ 2)
ஆளாம் பெண்ணுக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
(பின்பாட்டூ 2)
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளவிகள் விட்டூ போச்சு
நித்திரை வந்து நிலவ மறைக்குது
உத்தரவு கொடூ காளி தாயே
தன்னன்ன…
– சரணம் ஐயப்பா –