தேவி கன்யாகுமாரி பராசக்தி தேவி
கன்யாகுமாரி
தாவி வருகுதம்மா என் நெஞ்சம் உன்
தாளினை நாடூதம்மா
ஞானம் எல்லாம் நீயே என்றே மனம்
நியாயம் உரைக்குதம்மா
ஞாயிறு திங்கள் எல்லாம் நின்திரு ஞான
ஒளியின் பொறி
பார்க்க வந்த என்னை தேவி நீ பக்கத்தில் வா
என்று
பார்த்த பார்வையினிலே கல் நெஞ்சம்
பாகாய் உருகிற்றம்மா
தேகம் புனிதமாக தேவியே உன்னை தேடி
அலைந்தேன்
அம்ச சோகத்தை ஊட்டிவிட்டாய் இனி
அகம்பாவம் தொலைந்ததம்மா
நீலக் கடல் ஓரம் கன்னித்தாய் நின்னை
கண்ட பின்னர்
நாலாவித உலகில் என் கண்கள் நின்னையே
நாடூதம்மா
பார்க்கும் இடம் தோரும் நின் முகம்
புன்சிரிப்புள்ளதம்மா
யார்க்கினி அஞ்ச வேண்டும் உலகில்
எல்லாம் உனதுமயம்
– சரணம் ஐயப்பா –