ஆட்டம் என்ன பாட்டூ என்ன ஐயப்பா
நீ ஆடி வரும் அழகு என்ன ஐயப்பா
ஆராட்டின் அந்தியத்தில் ஐயப்பா
ஆனந்த நீராட்டு ஐயப்பா
பம்பையிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் பார்வையிலே நான் குளிப்பேன் ஐயப்பா
பாலினிலே நீ குளித்தாய் ஐயப்பா
உன் புகழ் பாடி நான் குளிப்பேன் ஐயப்பா
உன் புகழ் பாடி நான் குளிப்பேன் ஐயப்பா
மணியடிக்கும் கோவிலிலே ஐயப்பா
என் மணிகண்டா நீ இருப்பாய் ஐயப்பா
மலர் மாரி பொழிந்திடவே ஜயப்பா
மணிக்கொடியும் ஏறிடவே ஐயப்பா
காணவந்த காட்சி ஒன்று ஐயப்பா
இங்கு கண் குளிர கண்டுவிட்டோம் ஐயப்பா
காமகோடி உரு வடிவில் ஜயப்பா
கற்பகமே அற்புதமே ஐயப்பா
– சரணம் ஐயப்பா –